கொசஸ்தலை ஆற்றின் தரைபாலம் நீரில் மூழ்கியது
![]()
பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் : 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லும் போக்குவரத்து துண்டிப்பு :
திருவள்ளூர் அக் 25 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். வட கிழக்கு பருவ மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கடந்த 2 நாட்களாக பெய்தது. இதனால் பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2478 கன அடி நீர் நிரம்பி உள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்தும், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணையிலிருந்தும், ஆந்திர மாநிம்ல அம்மம்பள்ளி அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய்கள் மூலம் வரும் தண்ணீரால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 7250 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

இதனால் ஏரியிலிருந்து வினாடிக்கு 6500 கன அடியாக உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூண்டி அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இந்த தரைப்பாலத்தின் வழியாக பூண்டியில் இருந்து நம்பாக்கம் கிருஷ்ணாபுரம் சென்றான்பாளையம், ரங்காவரம், வெள்ளாத்துக் கோட்டை, ஆற்றம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நம்பாக்கம் கிருஷ்ணாபுரம் சென்றான்பாளையம், ரங்காவரம், வெள்ளாத்துக் கோட்டை செல்பவர்கள் பூண்டி நீர் தேக்கத்தின் மீது சென்று வருகின்றனர். மேலும் மழை அதிகமாகி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகமாகும் பட்சத்தில் பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் இதனால் தரைப்பாலம் முழுவதும் அடித்துச் செல்ல வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியிருப்பதால் புதிய மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.