பாதாள வடிகால் குறித்துஅனிபால் கென்னடி MLAஆய்வு

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் பாதாள வடிகால் பிரிவு பணிகள் குறித்து  அனிபால் கென்னடி எம்எல்ஏ ஆய்வு.
புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை ஜெயமுத்து மாரியம்மன் கோயில் வீதி, நேதாஜி நகர் 1 அசோகன் வீதி, நேதாஜி நகர் 2 வீரன் கோவில் வீதி, நேதாஜி நகர் 3 மெயின் தெரு மற்றும் திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை பாதாள வடிகால் பிரிவு பணிகள் குறித்து துறை அதிகாரிகளை நேரில் அழைத்து சென்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து பாதாள வடிகாலில் தேங்கி இருந்த கழிவு நீரை உறிஞ்சி எடுக்கும் வாகனத்தின் உதவியுடன் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர், அதனை நேரில் பார்வையிட்டு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர், இளநிலை பொறியாளர்கள் சங்கர் மற்றும் பாலாஜி, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, நிசார் , தமிழர் களம் அழகர் மற்றும் கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
0Shares