கார் மோதிய விபத்தில் மூன்று நபர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.

Loading

முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது அதே திசையில் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் சென்ற மூன்று நபர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.
உளுந்தூர்பேட்டை.அக் 24,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியமாதேவி கிராமம் மேம்பாலத்தில்  உளுந்தூர்பேட்டை டு கள்ளக்குறிச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டேங்கர் லாரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பின்னால் சென்ற கார் லாரி முந்துவதற்காக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது கார் அதிவேகமாக மோதிய விபத்தில் ஓட்டுநர் சந்தோஷ் உட்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே காரில் உடல் நசிங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
இந்த கோர விபத்தில் காரில் சென்ற 3 பேரும் உடலும்  இடுபாடுகளில் சிக்கி உடலை மீட்க முடியாமல்  தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியோடு நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்கள் சேலம் மாவட்டம் சில நாயக்கம்பட்டி சந்தோஷ் என்பவர் மட்டும் தெரிய வருகிறது மற்ற இருவர் பெயர் முகவரி தெரியவில்லை.
இந்த சந்தோஷ் என்பவர் கடலூர் நீதிமன்றத்தில் ஓயவாக வேலை செய்வதாக தகவல். இது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் மற்றும்
எலவனாசூர்கோட்டை போலீசார்  விபத்துக்குள்ளான வாகனங்களை கைப்பற்றி விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது.
————
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை செம்பியமாதேவி மேம்பாலத்தில் டேங்க் லாரியின் பின்னல் கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவம் படம்
0Shares