கல்வீடு கட்ட 15 பேருக்கு ரூ11.70 லட்சம் நிதி
![]()
புதுச்சேரி மணவெளி தொகுதியில் கல்வீடு கட்ட 15 பேருக்கு ரூ11.70 லட்சம் நிதி உதவிக்கான அரசாணைகளை சபாநாயகர் செல்வம்.ஆர் வழங்கினார்
புதுச்சேரிஅரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் கல்வீடு கட்டுவதற்காக 15 நபர்களுக்கு ரூபாய் 11.70 லட்சம் நிதி உதவிக்கான அரசாணைகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று வழங்கினார்.
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவனையாக 1 நபருக்கு ரூ.1.20 லட்சம் இரண்டாவது தவணையாக 1 நபருக்கு ரூபாய் 1.60 லட்சம் மூன்றாவது தவணையாக 10 நபர்களுக்கு தலா ரூபாய் 70 ஆயிரம் வீதம் ரூ.7.00 லட்சம் 1 நபருக்கு ரூ.1.90 லட்சம் என மொத்தம் ரூ.11.70 லட்சம் நிதி உதவிக்கான அரசாணைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று தனது இல்லத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் திரு பாஸ்கரன் களப்பணியாளர்கள் மற்றும் மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் சக்திபாலன் சக்திவேல் ஆண்டியார் பாளையம் ராஜா பழனிவேல் அருள் ஆதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

