திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மாவட்ட நிர்வாகம் தயார்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை: மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது: மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தகவல்:
திருவள்ளூர் அக் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் இரண்டு நாட்களுக்கு முன்னாள் அறிவித்து இருந்தார்கள். அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாகி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு நேற்று கொடுத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காலையில் டெல்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை ஒட்டி இருக்கிற திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக ஆய்வு நடத்தி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளணும் ஒவ்வொரு துறையும் எப்படி ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று அனைத்து அறிவுரைகளையும் நமக்கு கூறுனார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றில் இருந்து எல்லா குழுக்களும் தயார் நிலையில் இருக்காங்க. நேற்றைக்கு பொறுத்த வரைக்கும்
இரவு இரண்டு இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக ஊத்துக்கோட்டை மற்றும் ஆவடி இரண்டு பகுதிகளில் மழை பெய்தது. மற்ற இடங்களில் சராசரியாக 62 -70மிமீ மழை இருந்தது. மொத்தமாக மாவட்டத்தில் சராசரியாக மழை 7.5 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.
இரவு இரண்டு இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக ஊத்துக்கோட்டை மற்றும் ஆவடி இரண்டு பகுதிகளில் மழை பெய்தது. மற்ற இடங்களில் சராசரியாக 62 -70மிமீ மழை இருந்தது. மொத்தமாக மாவட்டத்தில் சராசரியாக மழை 7.5 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்னாடியே மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிற 47 பகுதிகளுக்கும் தனியாக ஒரு அலுவலர்களை நியமித்து அந்த அலுவலர்கள் மூலமாக அனைத்து துறையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டதனால் அந்த பகுதிகள் அதிகமாக தண்ணீர் தேங்கவில்லை. ஒன்று இரண்டு இடங்களில் ஒரு அடி அரை அடி இருக்கிற தண்ணீரையும் விரைவில் வெளியேற்ற இயந்திரங்கள் எல்லாத்தையும் தயார் செய்து, அலுவலர்களும் தயார் நிலையில் களத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
4480 தன்னார்வலர்கள் மூலமாக அந்தந்த பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து அவர்களை அந்தந்த பகுதிக்கு முதல் முறையே இந்த வருடம் பயிற்சி கொடுத்து தங்க வைத்திருக்கிறோம். ஏன்னென்றால் அரசு நிர்வாகம் ஒரு இடத்தில் இருக்கும் போது அவர்கள் உள்ளுர்களில் இருக்கும் இடங்களில் உடனடி நிவாரணம் அவர்கள் பண்ணிக்கலாம். First Responder சொல்கிற தன்னார்வலர்கள் மூலமாக பயிற்சி கொடுத்து அந்தந்த இடங்களில் தங்க வைத்துள்ளோம். அதுபோல ஆப்டமித்ரா என்ற தன்னார்வலர்கள் நம்ம ஒன்றிய அரசு மூலமாக ஒரு 500 நபர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களையும் அந்தந்த பகுதிகளில் வைத்திருக்கிறோம்.
அதுபோக நமக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் அப்படின்னு ஐந்து நிரந்தர தங்குமிடங்கள் மூன்று இடங்களில் மீஞ்சூர். பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு தாலுகாவில் கட்டி அந்த இடங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார் .
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் புகார்கள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
இவ் ஆய்வில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) மதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.