இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் அக் 20 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் 922 குடும்பங்களில் 2678 நபர்களுக்கு இவர்களில் ஆண்கள் 1052, பெண்கள் 1146, ஆண் குழந்தைகள் 229, பெண் குழந்தைகள் 251 2025-2026 ஆண்டிற்கான விலையில்லா ஆடைகள் கீழ்கண்டவாறு வரப்பெற்றன. ஆண் -பெரியவர் வேட்டி,லுங்கி 2, உள்பனியன் 2, ஆண் – சிறியவர் (12 வயதுக்குட்பட்டவர்) அரைகால்சட்டை (டிராயர்) 2, உள்ளாடை (பனியன்) 1, சட்டை 1, பெண்-பெரியவர் சேலை 2, ரவிக்கை (பிளவுஸ்) 2, உள்பாவாடை 1, பாவாடை 1, பெண் – சிறியவர் (12 வயதுக்குட்பட்டவர்) ரவிக்கை 1, கவுன் 1, ஒவ்வொரு குடும்பத்திற்கும் துண்டு (டவல்) 2 மொத்தம் 18 மேற்படி முகாம் வாழ் மக்களுக்கு அமைச்சர் ஆடைகள் வழங்கி பேசினார்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு துறை வாயிலாக மொத்தம் 29 மாவட்டங்களில் உள்ள 105 முகாம்களில் உள்ள 19677 குடும்பங்களை சேர்ந்த 56929 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி முகாமில் 927 குடும்பங்களை சேர்ந்த 2678 நபர்களுக்கு இன்று விலையில்லா துணிமணிகள் வழங்கப்படுகிறது. மேலும் மாநிலத்தில் இத்திட்டம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 19551 குடும்பங்களை சேர்ந்வர்களுக்கு ரூ.19.98 கோடி மதிப்பீட்டில் துணிமணிகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.4.64 கோடி நிதி விலையில்லா துணிமணிகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் ரூ.620 கோடி மதிப்பீட்டில் 10.469 வீடுகள் மூன்று கட்டங்களாக கட்டி ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.
இதில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் டாக்டர்.எம்.வள்ளலார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மறுவாழ்வு நல வட்டாட்சியர் செல்வகுமார், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் திரு.சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.