இன்றைய ராசிபலன்:19-10-2025

Loading

 

இன்றைய ராசிபலன்
மேஷம்

கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிசபம்

விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உடல் ஆரோக்கியம் தேறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். பணப் புழக்கம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும்.கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. புதியவர்கள் நண்பர்களாவார்கள். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர்.தாங்கள் எடுக்கும் தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். கல்வித் தடை நீங்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும். ஆரோக்கியம் பளிச்சிடும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

தோல்வி பயம் நீங்கும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள்‘ விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நற்செய்தி வரும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

சோர்வும் களைப்பும் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. இனிமையான சம்பவம் உண்டாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுப் போனப் படிப்பை தொடர்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மகரம்

புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளாக பேசாத உறவினர்களிடம் மீண்டும் பேசுவர். வசதி, வாய்ப்புகள் பெருகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து வந்து சேரும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவர். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

0Shares