வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம்

Loading

சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார துணை அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். 

பின்னர்  மரச் செடிகளை வளர்க்க வனத்துறையுடன் இணைந்து  சிறப்பான  நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான  வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் ஊராட்சி யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares