பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிக அளவு மழையை பெற்றுத்தர கூடிய வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளனர்.