லஞ்ச புகார்..நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!
![]()
திருவள்ளூரில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .சந்தேகத்திற்கு இடமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிக அளவில் புழங்குவதாக வந்த தகவலை அடுத்து வருமானம் ஈட்டக்கூடிய அரசு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் ஆயில் மில் இந்திரா காந்தி தெருவில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றது.
இந்த அலுவலகத்தில் வீடு கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரித்தல், வீட்டு மனைக்கான டிடிசிபி அங்கீகாரம் வழங்குதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த அலுவலகத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து சென்றனர்.

