மானிய விலையில் விதைத் தொகுப்புகள்.. அமைச்சர் நாசர், வழங்கினார்.

Loading

நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மானிய விலையில் விதைத் தொகுப்புகளை அமைச்சர் சா.மு.நாசர், வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராம மக்களின் மூன்று அத்தியாவசியமான தேவைகளை தேர்வு இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செல்வினம் குறித்து|விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல் ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :

கிராம சபை கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளின் மன்ற தலைவர்களின் தலைமையில் நடத்தப்படுகிறது. மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அதனை உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் கிராம சபை கூட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு சில தீர்மானங்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 3 ஊராட்சிக்கு தேவையாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நசரத்பேட்டை கிராமம் மாசிலாமணி தெருவில் ரூ.75,000 மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கப்படும் என்று இங்கே உங்களுக்கு அறிவித்துள்ளார், அடுத்து நசரத்பேட்டையில் லட்சுமிபுரம் பகுதியில் தார் சாலை ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் அதேபோன்று முத்துரங்க நகர் தெருவில் 150 மீட்டர் நீளத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இறுதியாக நசரத்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக கல்லறை , குப்பை கிடங்க அமைக்க தனி இடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பழுதடைந்த சமுதாய கூடத்தை சீர் செய்வது, கொசுகளை கட்டுப்படுத்த கொசு மருத்துகள் தெளிக்க வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மானிய விலையில் விதைத் தொகுப்புகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் வை.ஜெயகுமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ், இணை இயக்குநர் வேளாண்மை (பொ) என்.ஜெ.பால்ராஜ் . வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி (வ.ஊ),மகேஷ் பாபு (கி.ஊ) பூவிருந்தவல்லி வட்டாட்சியர் திரு.உதயம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares