உடனடியாக அந்த கோப்பிற்கு அனுமதி வழங்கு..பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்!

Loading

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணி வழங்க காலம் கடத்தாமல் உடனடியாக அந்த கோப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டி இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் சுமார் 2642 ஊழியர்கள் வவுச்சர் சம்பளம் அடிப்படையில் பணியாமத்தப்பட்டனர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தேர்தல் துறையில் சில கட்சிகள் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைவரையும் தேர்தல் துறை நீக்கச் சொன்னதாக சொல்லி பொது பணித்துறை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது..

பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்கட்டங்களாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியதில் பலனாக கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கப்பட்டு மாதச் சம்பளம் ஆக ரூபாய் 10 500 /-வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்கள்

சட்டமன்ற உறுதிமொழி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோப்பு தயார் செய்து மேதகு துணைநிலை ஆளுநர் மற்றும் தலைமைச் செயலர் ,நிதிச் செயலர் ,துறைச் செயலர் ஆகியோர்களின் ஒப்புதல் பெற வேண்டி காத்திருப்பில் உள்ளது காலம் கடத்தாமல் உடனடியாக அந்த கோப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டி இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் gp தெய்வீகன்,லெனின் பாஸ்கர், குமரகுரு, சத்யாவதி, மணிவண்ணன், கலியமூர்த்தி, சக்திவேல், ஆகியோர் தலைமையிலும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பணி நீக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

0Shares