ஆட்டோ கவிழந்த விபத்து..படுகாயம் அடைந்த மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கி ரவி MLA !

Loading

ராணிப்பேட்டை அருகே ஆட்டோ கவிழந்த விபத்தில் 3 மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில் 3 மாணவிகளை ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏ.வுமான சு.ரவி நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி கணபதிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பிரீத்திமா(16) காவியா (17) சபிதா (16) ஆகிய 3 பேரும் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் பிளஸ் டூ படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி வழக்கமாக பள்ளி முடிந்து மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்ப அரசு பேருந்து எதிர்பார்த்த நிலையில் பேருந்து டயர் வெடித்து நின்று விட்டதால் வேறு வழியில்லாமல் அதே ஊரைச் சேர்ந்த ஒரு ஆட்டோவில் மூவரும் ஏறிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு போகும் வழியில் அந்த ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது அதில் மூன்று மாணவிகளும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ப்ரீத்திமாவுக்கு வலது கால் பாதம் கிழிந்து எலும்பு வெளியே தெரிந்து மூன்று எலும்பு உடைந்துள்ளது. காவியாவுக்கு இடது கை உடைந்து அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைக்கப் பட்டுள்ளது. சபிதாவுக்கு இடது கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் கடந்த 22 நாட்களாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து அவர்களை எதிர்கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏ.வுமான சு.ரவி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதிதிராவிட குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின பெற்றோர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22 நாட்களாக இரவு பகல் திருவள்ளூர் மருத்துவமனையிலேயே தங்கி பிள்ளைகளை கவனித்து வருகின்றனர்.

போதிய வருமானம் இல்லாமல் சிரமப்படுவதால் இவர்கள் குணமாக குறைந்தபட்சம் ஆறு மாத காலமாகும். அதுவரை இவர்களை பராமரிப்பதற்கும் சிகிச்சை கொடுப்பதற்கும் பெற்றோர்களுக்கு எந்த வசதி வாய்ப்பும் இல்லை. எனவே விபத்தில் படுகாயம் அடைந்த இந்த மூன்று மாணவிகளுக்கு பராமரிப்புக்காகவும் தொடர்ந்து சிகிச்சை கொடுப்பதற்காகவும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இவர்களுக்கு உயர் சிகிச்சை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. ஜி.விஜயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நவாஸ் ஆகாமது, லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

0Shares