பனை விதைகள் நடவு செய்யும் பணி..மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்.!

Loading

தேனி மாவட்டம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம், வைகை அணைப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும்
நீர்வளத்துறை சார்பில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று
துவக்கி வைத்தார்கள்.

பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். எந்த தட்பவெப்ப
நிலையிலும் தழைத்து வளரக் கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை
அதிக அளவு சேமித்து வைக்கும் திறன் பெற்றது. மண்ணரிப்பை
தடுக்கக்கூடியது. மேலும், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதனீர்,
பனைவெல்லம், பனஞ்சீனி, பனங்கிழங்கு, பனைபழம் உள்ளிட்ட
உணவுப்பொருட்களும் மற்றும் பனை ஓலை, பனை நார் என அனைத்தும்
பொருட்களும் மக்களுக்கு பயன்படுகிறது.

பனைமரத்தின் முக்கியத்துவம் கருதியும், நமது மாவட்டத்தில் பனை
மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,
தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு
துறைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து 2025 ஆம் ஆண்டில்
தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 6 கோடி பனை விதைகள்
நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திற்கு 6,50,000 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு
நிர்ணயம் செய்யப்பட்டு, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை,
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை,
கல்லூரிகள், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல துறைகள்
இணைந்து ஒரு கூட்டுமுயற்சியாக பனைவிதைகள் நடவு செய்வதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
வைகை அணைப்பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி
வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி,
உதவி செயற்பொறியாளர் (வைகை அணை) திரு.சேகரன், வட்டாட்சியர்
திரு.ஜாஹிர் உசேன், பசுமை தோழர் திருமதி அஃப்சரா, நாட்டு நலப்பணிகள்
திட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares