பண முதலைகளிடம் மக்கள் விலை போக மாட்டார்கள்…எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆவேசம்.!

Loading

புதுச்சேரி மக்கள் விலை போக மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆவேசமாக தெரிவித்துள்ளார்!

சிவாதி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் தளபதி அவர்கள் ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் பாசிச ஆதிக்கத்திலிருந்தும், இதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ.க கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியின் மண்–மொழி–மானம் காக்க, தி.மு.கழகத்தின் சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரையை முன்னெடுக்க ஆணையிட்டுள்ளார்.

புதுச்சேரி, மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளைக் கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர், எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி., அவர்கள் தலைமையில் ஏற்கனவே முத்தியால்பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக வரும் 15-ஆம் தேதி புதன்கிழமை தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 7 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை ஜெகத்ரட்சகன், எம்.பி., தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக தட்டாஞ்சாவடி தொகுதியில் 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆலோசனை கூட்டம் காந்திநகர், வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பாரி நகரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தட்டாஞ்சாவடி தொகுதி அவைத்தலைவர் தலைமை கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளரான, இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு உடன் பிறப்பே வா உறுப்பினர் சேர்க்கை முகாமை எப்படி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கி பேசுகையில், புதுச்சேரிக்கு சம்பந்தமில்லாத பலர் வந்துள்ளதையும், அவர்கள் புதுச்சேரியினை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். தேர்தலுக்காக பண முதலைகள் புதுச்சேரியை படையெடுத்து உள்ளனர். இவர்களிடம் மக்கள் விலை போக மாட்டார்கள். இவற்றை எல்லாம் எதிர்கொள்ள தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு, மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் பெரும் முன் உதாரணமாக நடைபெறும் ஆட்சியினை, புதுச்சேரியிலும் ஏற்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என்பது தலையாய கடமை. தட்டாஞ்சாவடி திராவிட முன்னேற்ற கழகம் முன்பு இல்லாததை போல் பெரும் நெகிழ்ச்சியை இப்போது கண்டுள்ளது. அதற்கு தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் நித்திஷ் சிறந்த முறையிலே தனது பணியை தொடங்கியுள்ளார்.

உங்களது அனைத்து ஒத்துழைப்பினை கொடுத்துள்ளீர்கள். இன்னும் மென்மேலும் சிறந்த முறையில் அவர் பணியாற்ற உங்களது ஒத்துழைப்பை தாருங்கள். சுமார் 28 ஆண்டுகளாக புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லை. ஆனாலும் கழகம் இன்றுவரை துவண்டு போகவும் இல்லை. தொடர்ந்து நாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். உங்களை வழி நடத்துவதற்கு தட்டாஞ்சாவடியில் ஒரு முகத்தை நாம் ஏற்படுத்தி தந்து உள்ளோம். அதன்படி சிறப்பாக செயல்படுங்கள். 2026 ஒரு பெரும் மாற்றத்தை புதுச்சேரி சந்திக்கும். புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி நிச்சயமாக உறுதியாக உதிக்கும் என்றார்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கோபால், இளம்பரிதி, அணி அமைப்பாளர்கள் காயத்ரி, மதிமாறன், மாநில துணை அமைப்பாளர்கள் பழனிசாமி, வீரமணி, பிரகாஷ், கலியமூர்த்தி, சுரேஷ், வெங்கடேசன் என்கிற வேலவன், சீனுவாசன், ஆறுமுகம், சிவதாசன், தொகுதி நிர்வாகிகள் இளங்கோவன், ஏழுமலை, திருலோகச்சந்தர், சுகுணா, செல்வம், ராஜசேகரன், ராஜா, வீரபாண்டியன், ஐயனாரப்பன், ராமமூர்த்தி, ஞானசேகரன், சிவசங்கரன், தமிழ்தாசன், தாமோதரன், மணிபாலன், முத்து, பிச்சாண்டி, பாலசுப்ரமணியன், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

0Shares