அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிற்சி.. ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்!
உதகை தோட்டகலை இணை இயக்குநர் அலுவலகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சியில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தோட்டக்கலைத் துறை தோட்டக்கலை இணை இயக்குநர். உதகை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகள், படித்த இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி வாழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரத்தை சேர்ந்த 30 விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை எஸ். ஷிபிலா மேரி, தோட்டக்கலை இணை இயக்குநர். உதகை அவர்களால் தலைமையேற்று துவக்கி வைக்கப்பட்டது.
நவநீதம், தோட்டக்கலை துணை இயக்குநர்(திட்டம்) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். உழவர் பயிற்சி மைய தோட்டக்கலை துணை இயக்குநர் த. எஸ். ஜெயலட்சுமி அவர்கள் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், மண் வள மேம்பாடு, உயிர் உரங்கள், பயிர் சுழற்சி முறைகள், பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகள், அங்கக சான்று பெறுதல் போன்றவற்றை எடுத்துரைத்தார்.
கவிதா, இணை பேராசிரியர் மற்றும் தலைவர் தோட்டக்கலை ஆராச்சி நிலையம், உதகை அவர்கள் இயற்கை வேளாண்மை பற்றிய தொழில்நுட்பங்களை விளக்கி கூறினார். THOFA நிறுவனத்தின் இணை செயலாளர் சிவக்குமார் அவர்கள் இயற்கை விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி, தோட்டக்கலை உதவி அலுவலர், உழவர் பயிற்சி நிலையம் பாபு மற்றும் BTM. தஞ்சை மாவட்டம் ஆகியோர் செய்திருந்தனர்.