கைத்தறி நெசவு குறித்து 45 நாட்கள் பயிற்சி..தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ஏற்பாடு!
மத்திய அரசின் கைத்தறி மேம்பாட்டு துறை மூலமாக சுமார் 45 நாட்கள் அளிக்க பட்ட கைத்தறி நெசவு பயிற்சியில் பயிற்சி பெற்ற 18 மாணவ மாணவியர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனத்தில், சேலம் மத்திய அரசின் கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் சார்பில், 45 நாட்கள் கைத்தறி நெசவு மற்றும் ஜக்காடு டிசைனிங் பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டது. இந்த பயிற்சியினை சுமார் 18 மாணவ மாணவியர்கள் கற்று வந்தனர். அவ்வாறு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, சேலம் கைத்தறி பயிற்சி மையத்தின் துணை ஆணையர் கார்த்திகேயன், சர்வோதயா சங்க செயலாளர் சிவக்குமார் ஆகியோர் இணைந்து சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கைத்தறி பயிற்சி மையத்தின் துணை ஆணையர் கார்த்திகேயன், கூறியதாவது.. மத்திய அரசின் கைத்தறி மேம்பாட்டு துறை மூலமாக சுமார் 18 மாணவ மாணவியர்களுக்கு நெசவு பயிற்சி அளிக்க பட்டத்து. இந்த பயிற்சியினை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்குவதுடன், அவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக 90 சதவிகிதம் மாணியத்துடன், கைத்தறி, கைத்தறி உபகரணங்கள், மற்றும் எலக்ட்ரானிக் ஜக்காடு இயந்திரங்கள் வழங்க முன்வந்துள்ளதாகவும், மேலும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசின் முத்ரா திட்டம் மூலமாக 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை மாணியத்துடன் கூடிய கடனுதவி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செல்பி வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கைத்தறி முருகேசன், டிசைனர் தர்மராஜ், சில்க் வில்லேஜ் அட்வைசர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.