வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தல்!

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடியதை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுடன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திருமதி ஷிபிலாமேரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பீட்டர் ஞானராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சிவசங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் திருமதி பிரம்மவித்யநாயகி, வளர்ச்சி திட்ட அலுவலர்

வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர் தோட்டக்கலைத்துறை (குன்னூர்) விஜயலட்சுமி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஜெயராணி, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காயத்ரி, குன்னூர் வட்டாட்சியர் ஜவகர், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

0Shares