ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டி..புதுச்சேரி வீரர்களை வாழ்த்தி வழியனுப்பிய ஏதிர்க்கட்சித் தலைவர் சிவா!
ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரர்களை ஏதிர்க்கட்சித் தலைவர் சிவா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்!
வருகின்ற 24-10-2025 முதல் 26-10-2025 வரை மலேசியா நாட்டில் நடக்க இருக்கும் ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் ( Tug- Of -War Asian Championships ) போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 12 நாடுகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளும் கலந்து கொள்ள இருக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வு நான்கு கட்டமாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. இதில் நம் புதுவை மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெங்கடேசன், அஜய், பிரசாந்த், குரூப் பிரசாத் மற்றும் வீராங்கனை ஜெயக்குமாரி இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு இறுதியாக இந்திய அணியில் இடம் பெற்று புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்கள். வருகிற 16-10- 2025 முதல் 22-10- 2025 வரை கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்க இருக்கும் இறுதி கட்ட பயிற்சி முகாமில் புதுவையில் இருந்து இந்த ஐந்து வீரர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதன் பிறகு வருகிற 23-10- 2025 அன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இந்திய அணி மலேசியா நாட்டிற்கு புறப்பட இருக்கிறது. இதில் புதுவை மாநில வீரர் வெங்கடேசன், மடுகரை, அஜய் கிருமாம்பாக்கம், பிரசாந்த் டி.என் பாளையம், குரு பிரசாத் தவளைகுப்பம் மற்றும் வீராங்கனை ஜெயக்குமாரி டி.என் பாளையம், புதுச்சேரி. இந்திய அணியில் இடம் பெற்றதற்காக இவர்களை புதுவை மாநில கையிறு இழுக்கும் சங்கத்தின் சார்பாக புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் தலைவரும் புதுவை மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான திரு இரா.சிவா அவர்கள் வாழ்த்தி பாராட்டினார். அப்போது சங்கத்தின் செயலாளர் திரு எம். சுந்தரமூர்த்தி அவர்களும், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். கோபால் தொகுதி செயலாளர் திரு. இரா. சக்திவேல், சங்க உறுப்பினர் அகிலன், பயிற்சியாளர்கள் நந்தகோபால், பார்த்திபன் தொகுதி பொருளாளர் சசிகுமார், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜ், ராம்குமார், தொகுதி மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.