சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டி..கே.எஸ்.அழகிரி சொல்கிறார்!
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்போம் என திருவண்ணாமலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்டவலம் சாலை திருவள்ளூர் சிலை அருகில் வாக்குதிருட்டு எதிரான கையெழுத்து இயக்கம் மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் நடந்தது. மாநகர தலைவர் என்.வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். விருதாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாநில பொதுச் செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இந்தியாவில் சர்வாதிகாரத்தை புகுத்த நினைக்கிறது. பீகாரில் 55 லட்சம் மக்களுக்கு வாக்குரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான காரணத்தை கேட்டால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சரியான பதில் வரவில்லை. அதன்பிறகு ராகுல்காந்தி பீகாருக்கு சென்று நடைபயணம் மேற்கொண்டார். இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை வந்துவிடக்கூடாதுஎன்ற காரணத்தினால் காங்கிரஸ் கட்சி மற்றும் அதனுடைய தோழமை கட்சிகளும் வாக்குதிருட்டுக்கு எதிராக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறோம். இந்தவிஷயம் பீகார் சம்பந்தப்பட்ட என்று பார்க்கக்கூடாது இந்தியாவினுடைய ஜனநாயகம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்க வேண்டும் எல்லோருக்கும் வாக்களிக்க உரிமை வழங்க வேண்டுமென்று ராகுல்காந்திக்குரிய நாள் அவர் இந்தியாவினுடைய நலனுக்காக எதிராக பேசுகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கம் நாடுமுழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்போம் அதிகாரத்தில் பங்கு கேட்போம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் குரல் சட்டமன்ற மன்றத்தில் கண்டிப்பாக ஒளிக்கும் என்றார்.
பேட்டியின்போது கடலூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே.காமராஜ் மோகன் ஒபிசி பிரிவு மாவட்ட தலைவர் பி.ரங்கநாதன் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் விநோதினி சக்திவேல் மாவட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.