உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு உதவித்தொகை..MLA அனிபால் கென்னடி வழங்கினார்!
புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் திருநங்கை நலனுக்கான உதவித்தொகையை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இன்று வழங்கினார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், புதுச்சேரியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நேரடியாக உதவித்தொகையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம்,சந்துரு, கலப்பன், சக்தி, ரவி, இருதயராஜ், ராகேஷ், இளைஞர் அணி மணிகண்டன், மகளிர் அணி ஜோஸ்லின், மாணவர் அணி விஷ்ணு, பவி, உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.