போட்டித் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி…மேயர் பிரியா தொடங்கி வைத்தார்!
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் சென்னை பள்ளிகளில் 10, 11 மற்றும்12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்குதல் குறித்துஆசிரியர்களுக்கான பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை
பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும்
ஆலோசனை வழங்குதல் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சியினை மாண்புமிகு மேயர்
திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (07.10.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில்
தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் அறிவிப்பின்படி, சென்னை பள்ளிகளில்
மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியினை வழங்குவதற்காக 162
ஆசிரியர்கள் மற்றும் இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மாநில தொழில் வழிகாட்டுதல் மைய
அலுவலர்கள் வாயிலாக இப்பயிற்சி இன்று வழங்கப்பட்டது.
இப்பயிற்சியினைத் தொடங்கி வைத்து மாண்புமிகு மேயர் அவர்கள் பேசும்போது
தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி
பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் கல்விக்காக
செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை இந்தியாவில் பிற மாநிலங்களும் இதனைப்
பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெருநகர
சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில் கல்விக்கான பல்வேறு புதிய
அறிவிப்புகள் வழங்கப்பட்டது. அதில் ஒன்றாக சென்னை பள்ளிகளில் 10,11 மற்றும்
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுவதற்கான
சிறந்த பயிற்சியினை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் வாயிலாக நடத்திட
அறிவிக்கப்பட்டு அதன்படி, இன்றைய தினம் தேர்வு செய்யப்பட்ட சென்னை
பள்ளிகளின் 162 ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம்
அலுவலர்கள் வாயிலாக விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி
இன்று நடைபெறுகிறது.
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களின்
வாயிலாக கல்வி மேம்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளுக்கான
பயிற்சியின் மூலம் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முழுமையாக தங்களை
தயார்படுத்திக் கொண்டு மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு உள்ளிட்ட அரசு
தொடர்புடைய துறைகளுக்கான தேர்வுகளை மன உறுதியுடன் எதிர் கொள்ள முடியும்.
இந்த பயிற்சி அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள்
மாணவர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம், தன்னம்பிக்கையும் மாணவர்களுக்கு
உருவாகிடும். சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கும்
வேலை வாய்ப்பு தேர்வுகளில் கலந்து கொள்வதற்கும் விண்ணப்பித்தல், உரிய
சான்றுகளை இணைத்து வழங்குதல், போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு
எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்கள்
உயர்வான நிலைக்குச் செல்ல முடியும். இதற்காக ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன்
மாணவர்களுக்கு பயிற்சியினையும் வழிகாட்டுதலையும் வழங்கிட வேண்டும் என
தெரிவித்தார்.
இந்நிகழ்வில், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.ம.பிரதிவிராஜ்,
இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (கல்வி) திரு.த.விஸ்வநாதன், மாநில தொழில் நெறி
வழிகாட்டும் மைய இணை இயக்குநர் திருமதி அ.அனிதா, துணை இயக்குநர் திருமதி
ந.சி.கலைவாணி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரக துணை இயக்குநர்
திருமதி கு.கவிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ப.ரங்கநாயகி மற்றும்
கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.