இராணிப்பேட்டை வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆய்வு!
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா
இ.ஆ.ப., அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், கிளாம்பாடி
ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 இலட்சம்
மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு
செய்து, பேருந்து நிழற்கூடம் நன்றாக கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். பின்னர்
இதன் அருகாமையில் பாழடைந்த கிணறு இருப்பதை ஆய்வு செய்து அதை சுற்றி
தடுப்பு வேலி அமைக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, கிளாம்பாடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்
வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள்
கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்கள். இதனை தொடர்ந்து சக்கரமல்லூர்
ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் பாரத பிரதமர் வீடு வழங்கும்
திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். தற்பொழுது கன்னி
கோவில் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் 30 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு
அதில் 6 நபர்கள் மட்டுமே வீடு கட்ட பணிகள் தொடங்கி அப்பணிகளும்
நிறுத்தப்பட்டு இருந்ததை பார்வையிட்டு, அதற்கான காரணத்தை கேட்டறிந்தார்.
நீர்நிலை புறம்போக்கில் உள்ளவர்களுக்கு அந்த இடத்திற்கு மாற்றாக, இந்த இடத்தில்
பட்டா வழங்கப்பட்டும் அவர்கள் அங்கிருந்து இடம்பெயற மறுத்து அங்கேயே
இருக்கின்றனர். அதனால் வீடுகள் கட்டாமல் அப்படியே உள்ளது என தெரிவித்தனர்.
ஆறு வீடுகள் கட்டப்பட்டு நிலுவையில் இருப்பதையும் ஒப்பந்ததாரிடம் கேட்டறிந்தார்.
பயனாளிகள் அரசின் மூலம் வழங்கப்படும் இதற்கான நிதி வங்கி கணக்கில் இருந்து
எடுத்துக் கொடுக்காமல் விட்டு விடுவதால் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் அவருடன் பேசி பணியை விரவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் இதனை கண்காணித்து நீர்நிலை
புறம்போக்கில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி, பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வீடு
கட்டி குடியேற நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து சக்கரமல்லூர் ஊராட்சியில் கிரீன் மிஷன் தமிழ்நாடு திட்டத்தில்
7000 மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை நாற்றங்கால் பண்ணையில் ஆய்வு
செய்து கேட்டறிந்தார்கள். தொடர்ந்து அப்பகுதியில் 100 நாள் வேலை திட்ட
பணியாளர்கள் பண்ணை குட்டை அமைப்பதை ஆய்வு செய்து, மாற்று ஓரத்தில் இந்த
பணியை மேற்கொள்ள கூடாது சரியான இடத்தை தேர்வு செய்து பணிகளை செய்ய
வேண்டும். மேலும் கிராம பகுதியில் செல்லும் நீர் வரத்து கால்வாய்கள்,
பொதுப்பணித்துறை நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கவும் அகலப்படுத்தவும்
தூர்வாரவும் 100 நாள் வேலை பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
இப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செய்ய வேண்டுமென என பொறியாளர்
அவர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து எசையனூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு
வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ஆய்வு
செய்தார். தொடர்ந்து அந்த ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி
முடிக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தின் பணியின் தரத்தினை ஆய்வு
செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து எசையனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் பகுதியிலுள்ள
ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 2.16 இலட்சம் மதிப்பீட்டில்
சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளி வளாகத்தில் உள்ள
புதர்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்க ஊராட்சி மன்ற தலைவரை கேட்டுக்
கொண்டார்கள். தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளின் வாசிப்புத் திறனை
குழந்தைகளை வாசிக்க வைத்து உறுதி செய்தார்கள்.
இந்த ஆய்வினில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை
திருமதி.ந.செ.சரண்யா தேவி, செயற்பொறியாளர் திரு.செந்தில்குமார், உதவி
செயற்பொறியாளர் திருமதி.பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அன்பரசன்,
வட்டாட்சியர் செல்வி.மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.சுதா பாலாஜி,
திரு.விஸ்வநாதன், திருமதி.பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.