போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்..ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில்
போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது..
கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் உள்ள எமரால்டு ஜூவல் தங்க நகை உறுப்பத்தி நிறுவனத்தில் ஜூவல் ஒன் நிறுவனம் மற்றும் கிரிசா அறக்கட்டளை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர்.
எமரால்டு மற்றும் ஜூவல் ஒன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்போட்டியில் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என நடைபெற்றது.
தொப்பம்பட்டி எமரால்டு மைதானத்தில் தொடங்கிய இபோட்டியை எமரால்டு நிறுவன நிறுவனர் சீனிவாசன், கே ஜி மருத்துவமனை தலைவர் கே ஜி பக்தவச்சலம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இநுத மாரத்தான் ஒட்டமானது தொப்பம்பட்டி எமரால்டு மைதானத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் வரை சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் மெடல்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.