ரூ.20கோடி செலவில் புதிய சாலை.. முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!
![]()
40 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.20கோடி செலவில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
புதுச்சேரியின் கிராமப்புறங்களில் உள்ள மணவெளி தொகுதியின் பூரணாங்குப்பம் – புதுக்குப்பம் சாலை, நானமேடு சாலை, நல்லவாடு சாலை,மங்கலம் தொகுதிக்குட்பட்ட கீழ்சாத்தமங்கலம், மணக்குப்பம், சிவராந்தகம் ஆகிய கிராமப்புற பகுதிகளில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.20கோடி செலவில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சிகளில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லஷ்மிநாராயணன், ஜெயக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே சாத்தமங்கலம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக கட்டித்தரவும், சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் மேலும் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் தெரிவித்தார்.

