புற்றுநோய் சிகிச்சைக்கான ஜெம் ப்ரெஸ்ட சென்டர் .. பாடகி அனுராதா ஸ்ரீராம் துவக்கி வைத்தார்!
ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ப்ரத்யேக ஜெம் ப்ரெஸ்ட சென்டர் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரபல பிண்ணனி பாடகி அனுராதா ஸ்ரீராம் துவக்கி வைத்தார்.
கோவை பங்கஜா மில், சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையின், ஒரு அங்கமாக ஜெம் புற்றுநோய் மையம், தனது பிரத்தியாக ஜெம் ப்ரெஸ்ட் சென்டரை திறந்துள்ளது. இம்மையத்தில் மார்பகப் புற்றுநோய் மற்றும் பிற மார்பக நோய்களை கண்டறிதல், அவற்றிற்கு சிகிச்சை அளித்தல், மற்றும் தடுத்தல் ஆகிய சிறப்பான சிகிச்சை மையமாக விளங்க உள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம், கலந்து கொண்டு இம்மையத்தை துவக்கி வைத்தார்.
மேலும் இம்மையம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. ஜெம் மருத்துவமனையில் மருத்துவ நிபுணத்துவம் மட்டும் சிறந்த விளைவுகளை வழங்கி வருகின்றது. தற்போது ஜெம் ப்ரெஸ்ட் சென்டர் மூலம், மார்பகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் எனவும், இம்மையம் மூலம் எண்ணற்ற பெண்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்ற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மார்பக புற்றுநோய் என்பது ஒரு உடல்நல பாதிப்பு மட்டும் இல்லை எனவும், அது உணர்ச்சி பூர்வமான பயணம் கூட என்று கூறினார். இங்கு இமேஜிங் சேவை, முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்து சிகிச்சைகளும் வழங்க உள்ளதாகவும், புற்றுநோயியல், மறு சீரமைப்பு, மற்றும் புனர்வாழ்வு வரை அனைத்தையும் இப்புதிய மையம் வழங்குவதாக தெரிவித்தார்.
மேம்பட்ட இமேஜிங், அல்ட்ரா சவுண்ட், மேமோகிராபி, மற்றும் எம்ஆர்ஐ வசதிகளுடன் நோய்களை கண்டறிவதில் துல்லியமான உறுதி தன்மையை இம்மையம் வழங்கும் என்று அவர் தெரிவித்தார் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரவீன் ராஜ், மருத்துவ இயக்குனர் டாக்டர் பரத் ராஜராஜன், கல்வி இயக்குனர் மது சாய்ராம், புற்றுநோயியல் துறை தலைவர் சிவக்குமார், கதிரியக்க நிபுணர் பிரேமா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.