கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பங்கேற்பு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பங்கேற்பு :
திருவள்ளூர் அக் 07 : தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய நகர, பேரூர் கழக செயலாளர்களோடு நியமிக்கப்பட்டுள்ள பாக ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தேர்தல் பணிகளை ஆற்றிட ஏதுவாக எடுக்கப்படவேண்டிய முன்னெடுப்புகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ., தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவள்ளூர் எம்எல்ஏ.வுமான வி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன் விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. கலந்து கொண்டு பாக ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் பேசிய போது, 2026 இல் நடைபெறவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கான தேர்தல். கட்சியில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீண்டும் முதல்வர் ஆன பின்பு அவரது கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்யப்படும்.
இந்தியாவை மீட்க போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியை மத்திய அரசு முடித்து விட்டது. கையில் அதிகாரம் இல்லாத அரசியல் கட்சிகள் மோடியை எதிர்க்க பயந்து கொண்டு இருந்த நிலையில் மோடியை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் நமது முதல்வர். திமுகவை ஏன் வீழ்த்த முடியவில்லை என்றால் அண்ணா உள்ளிட்ட தத்துவ தலைவர்கள் இருந்த காரணத்தினால் கட்சியை வீழ்த்த முடியவில்லை. அந்த தத்துவத்தையே வீழ்த்த முயற்சிக்கிறார்கள் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என கழக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா பேசும்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், திருத்தணி தொகுதி பார்வையாளர் சண்முகநாதன், திருவள்ளூர் தொகுதி பார்வையாளர் மாஸ்டர் பெ.சேகர், மாநில தொண்டர் அணி பயிற்சியாளர் மாஸ்டர் இ.குருதாஸ், மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, பா.உதயமலர் பாண்டியன், எம்.மிதுன் சக்கரவர்த்தி, சரஸ்வதி சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், வி.கிஷோர், மு.சுப்பிரமணியம், மற்றும் நிர்வாகிகள் தா.மோதிலால், வி.எஸ்.நேதாஜி, டி.ஆர்.திலீபன், ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் டி.கே.பாபு, அயூப் அலி, பிரபாகரன், பி.நீலாவதி பன்னீர் செல்வம், சாந்தி கோபி, அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.