இணை ஆணையர் தற்காலிக அலுவலகம் : அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்
![]()
திருவள்ளூர் ஜே.என்.சாலை சந்தானம் அவென்யூவில் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகம் : அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் அக் 05 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜே.என்.சாலை சந்தானம் அவென்யூவில் இந்து சமய அறநிலையத் துறையின் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் நிர்வாக மேலாண்மை கவனித்து வரப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 202- பட்டியலைச் சார்ந்த திருக்கோயில்கலும் மற்றும் 824 பட்டியலைச் சாராத திருக்கோயில்கள் என மொத்தம் 1026 திருக்கோயில்கள் என இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக செயல் அலுவலர்கள்,ஆய்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைத்தீர்வு மனுக்களை அளிப்பதற்கும் சுமார் 200 கி.மீக்கு மேல் பயணம் செய்து வேலூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.
மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான திருக்கோயில்கள் சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ளதால், அவற்றிற்கு சொந்தமாக பலகோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளது, அச்சொத்துகளை மேலாண்மை செய்வதற்கும், நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ள வழக்குகளை கண்காணித்து, அவற்றில் திருக்கோயில்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், திருக்கோயில்களின் அசையா சொத்துகளைக் வருவாய் ஈட்டிட ஏதுவாக, திருவள்ளூர் கண்காணித்து, முறையாக மாவட்டத்திற்கென தனியே ஓர் இணை ஆணையர் அலுவலகம் ஏற்படுத்துவது அவசியம் என கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக திருவள்ளூர் இணை ஆணையர் மண்டல அலுவலகம் கட்ட உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் ஜே.என்.சாலை சந்தானம் அவென்யூவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகம் தொடங்கி வைக்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி),துரை சந்திரசேகர் (பொன்னேரி) இணை ஆணையர்கள் அனிதா (வேலூர் மண்டலம்), ரமணி (அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்), உதவி ஆணையர் சிவஞானம், திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

