”நான் வதந்திகளுக்கு கவனம் செலுத்துவதில்லை” – பிரபல நடிகை கருத்து!
தன்னைச் சுற்றி பரவும் வதந்திகள் குறித்து அவர் பேசினார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னைச் சுற்றி பரவும் வதந்திகள் குறித்து காஜல் பேசினார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, ”நான் வதந்திகளுக்கு கவனம் செலுத்துவதில்லை” என்று தெளிவாகக் கூறினார்.
காஜல் இந்த ஆண்டு, “சிக்கந்தர்” மற்றும் “கண்ணப்பா” படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் “ராமாயணம்” படத்திலும் , இந்தியன் 3 படத்திலும் நடித்து வருகிறார்.