ப.சிதம்பரம் பிறந்தநாள் பெண்களுக்கான சமையல் போட்டி

Loading

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் காரைக்குடியில் பெண்களுக்கான சமையல் போட்டி.
காரைக்குடி
முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது. போட்டியில் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.
போட்டியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நான்கு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதல் சுற்று சைவத்திற்கும் மற்றும் இரண்டு மூன்று நான்கு ஆகிய சுற்றுகள் அசைவத்திற்கும் நடைபெற்றது. இப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள் தங்களுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினர். செட்டிநாடு சமையல் கலைக்கு பெயர் போன காரைக்குடியில் சமையல் போட்டி நடைபெற்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. காரைக்குடி
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி போட்டியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று பரிசுகள் வழங்கியதோடு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பார்வையாளர்களுக்கும் பரிசுகளை ஸ்ரீநிதி கார்த்திக் வழங்கினார். மேலும் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் பரிசு வழங்கி கௌரவித்தார்.
0Shares