மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  மற்றும்அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Loading

திருவள்ளூர்

மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  மற்றும்அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வாயலூர் 2×660 மெ.வா. எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மிக உய்ய அனல் மின் திட்டப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தினால் 9 வடமாநிலத்தவர்கள் உயிரிழந்த நிகழ்விடத்தை  போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  மற்றும்  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தனர்.

இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் மா.கோவிந்தராவ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares