தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டம்
தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது
பிறந்தநாளினை முன்னிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார்
அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது பிறந்தநாளினை
முன்னிட்டு கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணல் மகாத்மா
காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி
ஆதித்யா செந்தில்குமார் , கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.ஐயப்பன்,
மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா முன்னிலையில் (02.10.2025) அன்று மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவிக்கையில்,
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அகிம்சா வழியில் போராடிய தலைவர் மகாத்மா
காந்தி ஆவார். குஜராத் மாவட்டம், போர்பந்தரில் காபா காந்தி-புத்லிபாயின் மகனாக
1869 அக்டோபர் 2ஆம் நாள் தேசத்தந்தை பிறந்தார். அவர் இலண்டனில் பயின்று
வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பதவி வகித்த
காலத்தில் அங்கு நிகழ்ந்த இனவெறிக்கு எதிராகவும், அங்கு வாழ்ந்த இந்தியர்களின்
சமூக உரிமைகளுக்காகவும் போராடி வெற்றியும் பெற்றவர்.
இந்தியா வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற உப்பு
சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, இந்திய மக்களுக்கு தேசப்பற்று
உணர்வை ஊட்டி சுதந்திரம் அடைய வழிகோலியவர். உலகத்திற்கே
முன்னுதாரணமாக பல்வேறு போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தி இந்தியா
சுதந்திரம் பெற வழிவகுத்தவர். மேலும், சுதந்திர போராட்டம் மட்டுமன்றி,
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும்
போராடியவர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு உறுதுணையாக இருந்த மகாத்மா காந்தியடிகள்
அவர்களின் தியாகத்தினை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அவர்களது
பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் நாளினை காந்திஜெயந்தியாக கொண்டாடப்பட்டு
வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இ.க.பா., மாவட்ட வருவாய் அலுவலர்
ம.இராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்
ர.அ.பிரியங்கா இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், வருவாய்
கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர்