திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில் பங்கேற்பு :
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (திஷா) : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில் பங்கேற்பு :
திருவள்ளூர் அக் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (திஷா) நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான (திஷா) எஸ்.சசிகாந்த் செந்தில் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரும் உறுப்பினர் செயலருமான (திஷா) மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்) , எஸ்.சந்திரன் (திருத்தணி), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண்வள அட்டை திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை, பாரம்பரிய அங்கக வேளாண்மை திட்டம் சூரிய சக்தியாக இயங்கும் பம்பு செட்டுகள், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய சுகாதாரத் திட்டம், சமூக நலத்துறை சார்பில் மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் அங்கன்வாடி கட்டடப் பணிகளும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுகம்யா பாரத் அபியான் திட்டம் உட்பட பல வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.பின்னர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது :திருவள்ளூர் மாவட்டத்தில் திஷா ஒருங்கிணைப்பு ஆய்வு ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவித அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் உரிய காலத்தில் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டுமென எஸ்.சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.