பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்.. புதிய விதி அமல்!
![]()
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் மதுசூதன கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அப்போது செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்காக உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் காத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டி கூறியதாவது:“சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புதினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
சமீபகாலமாக வட மாநிலங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கும் மேற்பட்டோரும் ரெயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பலர் வீடுகளுக்கு தெரியாமல் வருவர்களை பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 162 வடமாநிலக் குழந்தைகளும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 85 குழந்தைகளும் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரெயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக்கொண்டு விரைவு ரெயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.ரெயில் நிலையத்தில் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. எனவே நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் தங்குவது விதிகளை மீறுவதாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.

