ஆசிரியை மீது ஆசிட் வீச்சு..அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆசிரியை மீது ஆசிட் வீசிவிட்டு போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தின் நகாசா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 வயது ஆசிரியை ஒருவர் பணியை முடித்து விட்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அவரை பின்தொடர்ந்து சென்ற நிசு திவாரி என்ற வாலிபர் திடீரென ஆசிரியை முகத்தில் ஆசிட் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார் .
இதனையடுத்து ஆசிட்வீச்சில் வலியில் துடித்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் குற்றவாளியை தேடிய போது கல்யாண்பூர் கிராமத்திற்கு அருகே போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற நிசு திவாரியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் பாளையக்காடு 2-வது வீதியை சேர்ந்த யோகேஷ் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், தனது வீட்டுக்கு அருகே வசித்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வர இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த யோகேஷ் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு எஸ்.ஆர்.சி. மில் மேம்பால பகுதிக்கு சென்று திடீரென கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.