பிரதமர் மோடியின் நண்பர்கள் இப்படி செய்கிறார்கள் ’ – மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்’ என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார்.அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது.
அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு சீனாவும், இந்தியாவும் நிதி அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
“சர்வதேச அளவில் நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் தூதரக உறவிகளில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்று தெரிவித்துள்ளார் .மேலும் பிரதமர் ‘எனது நண்பர்கள்’ என்று பெருமையாகக் கூறும் அதே நண்பர்கள்தான் இன்று இந்தியாவிற்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.