ஒரே நாளில் இத்தனை லட்சம் பேரா?‘சென்னை ஒன்று’ செயலிக்கு அமோக வரவேற்பு!

Loading

‘சென்னை ஒன்’ செயலிக்கு பொதுமக்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘சென்னை ஒன்’ செயலியை ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று’செல்போன் செயலி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் மூலம் சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த செயலி பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் ஒரே பயண பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னை ஒன்’ செயலிக்கு பொதுமக்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘சென்னை ஒன்’ செயலியை ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதில், டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை.

இதனால், ‘சென்னை ஒன்று’ செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தபோதும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. சென்னையில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்து சேவையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares