உலக அமைதி வேண்டி பேரணி..மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்!
உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனியில் சோல்ஜர் அகாடமி உலக அமைதி குழு பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாக சென்று உலக அமைதியை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
உலக அமைதி தினம் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 21ஆம் அனுசரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது
இதன் ஒரு பகுதியாக தேனியில் உலக அமைதி குழு, சோல்ஜர்ஸ் அகாடமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து உலக அமைதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த உலக அமைதி விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்
“போரை நிறுத்த வேண்டும்” உலகத்தில் அமைதி திரும்ப வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தேனி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணி தேனி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தேனி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது
இந்த விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.