மோதி பார்ப்போம் – திமுகவுக்கு சவால் விடுத்த விஜய்!
2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக கெத்தாக தேர்தலுக்கு வாருங்கள் என்று திமுகவுக்கு விஜய் சவால் விடுத்துள்ளார்.
நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;ச
”அதென்ன சனிக்கிழமைகளில் பிரசாரம் ஓய்வு நாட்களில் வருவதுதான் திட்டம். அரசியல் சிலருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா.. அதனால்தான் ஓய்வு நாட்களில் திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகிறோம்.
உங்களிடம் நான் பேசுவதே 3 நிமிடங்கள்தான். அப்போது அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்கிறார்கள். அரியலூரில் கரண்ட்டை கட் செய்கிறார்கள். பிரதமரோ, உள்துறை மந்திரியோ வரும்போது இதுபோல் கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள ஆயிற்றே..
பஸ்சுக்குள்ளேயே இருக்க வேண்டும். கையை உயர்த்தக்கூடாது., மக்களை பார்த்து சிரிக்கக்கூடாது என்கிறீர்கள். உங்களிடம் பேசக்கூடாதா? கொள்ளையடித்து வந்த உங்களுக்கு இவ்வளவு இருக்குமென்றால், சொந்தமாக உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும்.
நான் ஒன்றும் தனி ஆள் கிடையாது., மாபெரும் பெண்கள் படையின் சகோதரன், மாபெரும் இளைஞர்களின் சகோதரன். 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக கெத்தாக தேர்தலுக்கு வாருங்கள். கொள்ளையடிக்கிற நீங்களா.. இல்லை மக்கள் வீட்டில் ஓட்டாக இருக்கும் நானா என பார்த்துவிடலாம்..”இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.