எச்1-பி விசாவுக்கு செக்…இந்திய பணியாளர்களுக்கு வேட்டு வைத்த டிரம்ப்!

Loading

கஜானாவில் பணம் சேரும் வகையிலான கோல்டு கார்டு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.

ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந்தேதி டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.சீனா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.

மெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையையும் அறிமுகப்படுத்தினார். இந்தியாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி, கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்து அமல்படுத்தினார்.

இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை ஜூன் தொடங்கி ஆகஸ்டு வரையிலான 3 மாதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான அறிவிப்பு ஒன்றை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.

இதன்படி, எச்1-பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.88 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடி (1 லட்சம் டாலர்) அளவுக்கு உயர்த்தப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், வர்த்தக மந்திரி ஹோவார்டு லுட்னிக் முன்னிலையில் இதற்கான அறிவிப்பில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதன்பின்பு அவர் கூறும்போது, எங்களுக்கு பணியாளர்கள் தேவை. அதிலும், எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. அதனை அமெரிக்க பணியாளர்களை நீக்காமல், அதே வேளையில், உண்மையில் மிக திறன் வாய்ந்த நபர்களை நாட்டுக்குள் கொண்டு வருவது உறுதி செய்யப்படும் நோக்கத்தில் இந்த கட்டணம் இருக்கும் என்றார்.

இதனால், அமெரிக்க கஜானாவில், கோடிக்கணக்கில் நிதி வந்து சேரும். இந்த நிதியை வரி குறைப்புக்கு நாங்கள்பயன்படுத்தி கொள்வோம். கடன்களையும் அடைப்போம். அது வெற்றியடையும் என நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார்.

இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில் வசூலிக்கப்படும். இந்த விசாக்கள் 3 ஆண்டுகள் செல்லுபடியாக கூடியவை. அதன்பின்னர், அவற்றை 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ள முடியும்.

1990-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு எச்1பி விசா வழங்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில், இதன் நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள மாற்றங்களால், பல தொழிலாளர்கள் வேலை இழக்க கூடிய சூழலும் காணப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்களை நிறுவனங்கள் தக்க வைக்க முயற்சிக்கும்.

அப்படி திறமையில்லாத மற்ற நபர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பம் நிலை ஏற்படும். ஏற்கனவே, 71 சதவீத இந்தியர்கள் இந்த விசாவை பெறுவதற்காக வேண்டி, விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

0Shares