சென்னையை குளிர்வித்த மழை… பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!

Loading

சென்னை நகர்ப்புற பகுதிகளிலும், வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது.இந்த மழையால் மக்கள் மகிச்சியடைந்தனர்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்லமல் தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஇருந்தது .

இந்த நிலையில், சென்னை நகர்ப்புற பகுதிகளிலும், வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன்படி தி.நகர் மாம்பலம், அன்னாசாலை தேனாம்பேட்டை, காட்டுப்பாக்கம் திருவேற்காடு, ஆவடி, திருமுல்லைவாயல், தொழிற்பேட்டை, போரூர் வளசரவாக்கம், வானகரம், மதுரவாயல், ஐயப்பந்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், பட்டாபிராம், மாங்காடு, குன்றத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது.இந்த மழையால் மக்கள் மகிச்சியடைந்தனர்.

0Shares