ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை: மத்திய வேளாண்துறை அதிகாரி கைது!

Loading

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய வேளாண்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினமும் வழக்கம்போல் காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடுக்கு அரசு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.அந்தவகையில் சம்பவத்தன்று மாணவி கோயம்பேடுக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் மாணவியுடன் பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் பஸ்சில் கல்லூரி மாணவி அயர்ந்து தூங்கியபோது, அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், மாணவிக்கு ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுபற்றி பஸ் டிரைவரிடம் சம்பவத்தை கூறியுள்ளார் .

இதனையடுத்து மதுரவாயல் அருகே வந்தபோது பஸ்சை நிறுத்திய டிரைவர், இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரனையில் அவர், திருச்சியை சேர்ந்த ராகேஷ்(26) என்பதும், மத்திய வேளாண் துறையில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. கைதான ராகேஷிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0Shares