செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு..நீதிபதி புதிய உத்தரவு!
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணையை வருகிற அக்டோபர் 15-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அறப்போர் இயக்கம் சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்துள்ள மனுவில்,கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் 2021-2023-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதற்காக, ஆயிரத்து 182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் சுமார் ரூ.397 கோடி முறைகேடு நடந்திருப்பதும், இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என்று கூறியிருந்தது.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யவும், வழக்கை ஐகோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று அறப்போர் இயக்கம் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ், “36 ஒப்பந்ததாரர்கள் தங்களது டெண்டர் ஒப்பந்தத்தில் ஒரே விலையை குறிப்பிட்டுள்ளனர்,அதில் ஒரு பைசாவில் கூட மாற்றம் இல்லை” என்று வாதிட்டார்.இதையடுத்து அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற அக்டோபர் 15-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.