அனைத்து கட்சிகளுக்கும் அது இருக்க வேண்டும்..தவெக வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு!

Loading

தவெக தொடர்ந்த வழக்கில் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ரோடு ஷோ போன்றவைகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது இல்லை. ஆனால், எங்களது கட்சிக்கு மட்டும் போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதிக்கின்றனர். எனவே, விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி டி.ஜி.பி.க்கு ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. .அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வி.ராகவாச்சாரி, ‘‘த.வெ.க,., கூட்டத்துக்கு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், வரக்கூடாது என்பது உள்ளிட்ட நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை போலீசார் விதிக்கின்றனர். அனுமதி கேட்டு கொடுக்கப்படும் மனுக்களை கடைசி நேரத்தில் பரிசீலித்து, அனுமதி வழங்குகின்றனர் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோன்ற கூட்டத்தில் ஏற்படும் மக்கள் நெருக்கடியினால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதுபோன்ற சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.என தெரிவித்தார்.

அதற்கு மூத்த வக்கீல், கூறும்போது ‘‘நேற்று கரூரில் முதல்-அமைச்சரின் ரோடுஷோ நடத்தப்பட்டது’’ என்றார். உடனே நீதிபதி, ‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான்’’ என்றார்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரே விதமாகன நிபந்தனைகளைத்தான் விதிக்க வேண்டும். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில், த.வெ.க. தலைவர் விஜய் எந்த சாலை வழியாக வர வேண்டும். தொண்டர்கள் எந்த சாலை வழியாக வர வேண்டும் என்று போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால், கரூரில் நேற்று நடந்த ரோடு ஷோவில் சாலையின் இருபக்கங்களும் மக்கள் சூழ்ந்து இருந்தனர். 200 வாகனங்களுக்கு மேல் பின் தொடர்ந்து சென்றது. மேலும் திருச்சியில் நடந்த நிகூட்டத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் அனுமதியே வழங்கினர். கடைசி நேரத்தில் இதுபோன்ற ஏற்பாடுகளை எப்படி செய்யமுடியும்?’’ என்று மூத்த வக்கீல் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கீட்ட கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ் திலக், ‘‘மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்தான் த.வெ.கவுக்கும் விதிக்கப்பட்டது’’ என்றார்

அதற்கு நீதிபதி, ‘‘இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு தன்னுடையை தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த கூட்டத்துக்கு எதற்காக வரவேண்டும்? அவர்களை வர வேண்டாம் என்று விஜய் தான் சொல்ல வேண்டும்என தெரிவித்தார்.

மூத்த வக்கீல், ‘‘மற்ற அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தான் த.வெ.க,.வுக்கும் விதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

நீதிபதிகள், ‘த.வெ.க. பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவதில் போலீசாருக்கு என்ன சிரமம் உள்ளதுஎன்று கேட்டார் :அப்போது கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ்திலக், இதுபோன்ற கூட்டம், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து அனைத்து மாவட்டட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி., அறிவுரை அளித்துள்ளார். இதுபோன்ற அனுமதி கேட்கும் விண்ணப்பங்களை பரிசீலிப்பதிலும் காலதாமதம் செய்வது இல்லை. திருச்சியில் நடந்த கூட்டத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தக்கூடாது. என்று நிபந்தனைகளை போலீசார் விதித்து இருந்தனர். ஆனால், இந்த நிபந்தனைகளை த.வெ.க.வினர் முற்றிலும் மீறியுள்ளனர் என்று கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிபதியிடம் கொடுத்தார்.

அந்த படத்தை பார்த்த நீதிபதி, ‘‘இதுபோன்ற காலங்களில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. த.வெ.க., தொண்டர்கள் உயரமான இடங்களில் அபாயகரமாக ஏறி நின்றதை நானும் பார்த்தேன். ஆளும் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் மக்கள் வர வேண்டும். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது போன்ற வழிக்காட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இப்போது ஆட்சியில் இருக்கும், அல்லது முன்பு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் நிவாரணம் வழங்கியது உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

0Shares