எந்த கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
![]()
திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தி.மு.க.வின் முப்பெரும் விழாஇன்று கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற்றது . இதையொட்டி அங்கு சுமார் 50 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .
இந்த விழாவில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர் கூறியதாவது:பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும். நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி திமுக. மிரட்டலுக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடம் போராடி வருகிறோம். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதுஇவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .இந்த விழாவால் கரூர் மாவட்ட ம் விழாக்கோலம் பூண்டது.ஏராளமான கட்சி நிர்வாகிகள் அங்கு குவிந்தனர்.
மேலும் இந்த விழாவில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிகையாளர் பன்னீர் செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருதினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
