தி.மு.க மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல.. மு.க.ஸ்டாலின் திடீர் பதிவு..காரணம் என்ன?

Loading

“2026 தேர்தலுக்கான வெற்றிப் பாதை இந்த முப்பெரும் விழாவிலிருந்தே தொடங்கும். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம் என்று தொண்டர்களை மு.க.ஸ்டாலின் அழைத்துள்ளார்.

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், வருகிற செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை கொள்கைத் திருவிழாவாகக் கொண்டாட அழைத்துள்ளார்.

அவரது கடிதத்தில்,மு.க.ஸ்டாலின் கடிதம்: “நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்”
பெரியார் – அண்ணா – கலைஞர் ஆகியோரின் நினைவாக தொடங்கிய முப்பெரும் விழா வரலாற்றை விளக்கினார்.

இந்த ஆண்டு கரூரில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் நபர்களின் பெயர்களை அறிவித்தார்.
பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் நலனுக்காக போராடுவோம் என்ற உறுதிமொழியை தொண்டர்கள் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் வாக்காளர் உரிமையைப் பறிக்கும் முயற்சிகளுக்கும், தொகுதி மறுவரையறைக்கும், நீட் தேர்வுக்கும் எதிராக போராடுவோம் என்றார்.

தி.மு.க. “கொள்கையில்லா கூட்டமல்ல; கொள்கைப் பட்டாளமாகக் கூடும் இயக்கம்” என்று வலியுறுத்தினார்.
“2026 தேர்தலுக்கான வெற்றிப் பாதை இந்த முப்பெரும் விழாவிலிருந்தே தொடங்கும். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்; கூட்டம் முடிந்தவுடன் லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்” எனக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

0Shares