பசுமைப் புரட்சியின் தந்தை திரு.நார்மன் எர்னஸ்ட் போர்லாக் அவர்கள் நினைவு தினம்!.
![]()
பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அமெரிக்காவின் கிரெஸ்கோ நகரில் பிறந்தார்.
இவர் மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் 20 ஆண்டுகளுக்குள் அதிக விளைச்சல் தரும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குட்டையான (Semi Dwarf) கோதுமை பயிர் ரகங்களை உருவாக்கினார்.
இவற்றை மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் அறிமுகம் செய்ய வழிகாட்டினார். உணவு பாதுகாப்பை மேம்படுத்திய இவரது செயல்பாடு பசுமைப் புரட்சி எனப் பாராட்டப்பட்டது. உணவு உற்பத்தியை பெருக்கி, உலக அமைதிக்கு வித்திட்டதற்காக 1970ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம், அதிபரின் ஃபிரீடம் பதக்கம், நோபல் பரிசு ஆகிய 3 உயர்ந்த விருதுகளை பெற்றார். இந்தியாவின் பத்ம விபூஷண் விருதும் பெற்றவர். நார்மன் எர்னஸ்ட் போர்லாக் தனது 95வது வயதில் 2009 செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று மறைந்தார்.
செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய திருமதி.ஐரீன் ஜோலியட் கியூரி அவர்கள் பிறந்ததினம்!.
செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளரான ஐரீன் ஜோலியட் கியூரி 1897ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பாரிஸில் பிறந்தார்.
இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர்.
இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிடைத்தது.
ஐரீன் ஜோலியட் கியூரி 1956ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.

