அவர்தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்..பாகிஸ்தான் பயிற்சியாளர் சொல்கிறார்!
![]()
தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் நாளைமறுதினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என எதிரார்க்கப்படுகிறது.முகமது நவாஸ் தற்போது ஐசிசி தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியதாவது:தற்போதைய நிலையில் டி20 -யில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான். அவர் அணிக்கு திரும்பியதில் இருந்து கடந்த 6 மாதங்களில் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அணியில் அறிமுகம் ஆனார் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான்.
31 வயதான முகமது நவாஸ் 71 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். யுஏஇ-யில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.அதுமட்டுமல்லாமல் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீ்ழ்த்தினார் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

