பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம்..அதிமுக உரிமை மீட்பு குழு அறிவிப்பு!
![]()
நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் தரத்தை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று திரு.ஓம்சக்தி சேகர்தெரிவித்துள்ளார்.
அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை..
புதுவை மாநிலத்தில் கடந்த 7 நாட்களில் 2 இடங்களில் பொதுமக்கள் குடிநீர் தரம் குறித்து புகார் செய்து போராட்டம் நடத்தி உள்ளனர்.அவர்களின் பகுதிகளில் வரும் குடிக்க தகுதி அற்ற நீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரில் சென்று காண்பித்து எடுத்து சொல்லி வருகின்றனர்.அரசியல் கட்சிகள் இல்லாமல் பொதுமக்களே வீதியிலும் பொதுப்பணி துறை அலுவலகத்திலும் போராடுவது அதிகாரிகளின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
தண்ணீர் சுகாதாரம் இன்றி மஞ்சள் நிறத்தில் வருவதும்.இது போன்ற குடிநீரை பயன் படுத்துவதால் தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகிறது என்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் சொல்லி வருகின்றனர்.
குடிப்பதற்கு இல்லாமல் இதுவரை மற்ற பயன்பாடுகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால் எந்த பயன்பாட்டுக்கும் உபயோகப்படாத அளவிற்கு தண்ணீர் தரம் தற்போது மாறி உள்ளது.
சாதாரணமாக குடிநீரில் சதவிகிதம் இருக்கு வேண்டிய அளவுக்கு மாறாக TDS அளவு மிக அதிகமாகி புதுவை முழுவதும் குடிப்பதற்கு தகுதியற்ற நீராக மாறியுள்ளது.
நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தரம் மிகவும் குறைந்து உள்ளது குறித்தும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று 1 மாதத்திற்கு முன்பு பொதுப்பணி துறைக்கு நான் கோரிக்கை மனு அளித்தேன்.ஆனால் எந்த ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்னும் 15 நாட்களுக்குள் நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் தரத்தை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பொதுப்பணி துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

