இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..!
விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு சென்னை எம் ஜி ஆர் மார்க்கெட் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை எம் ஜி ஆர் மார்க்கெட் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கணபதி ஹோமம் செய்யப்பட்டு பின்னர் விநாயக பெருமானுக்கு சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்து மக்கள் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலாளர் செந்தில் ஜி தலைமையில் நடைபெற்ற இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி சதுர்த்தியை ஒட்டி விநாயக பெருமானுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அதேபோல் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த சிலையானது பக்தர்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டினை இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் ஜி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். ஆப்ரேஷன் சிந்தூரை நினைவுபடுத்தும் விதமாக விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இந்த பூஜை ஆனது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.